இந்தியாவை பாரத் என்று மாற்றவேண்டும் சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் கருத்து !

பிரபல பாலிவுட் நடிகை கங்கனை ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவார்.அந்த வகையில்,இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது,இது ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் இந்தியா.சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம். இதை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதையே வைக்க வேண்டும். உங்களின் பிள்ளையை சின்ன மூக்கு அல்லது இரண்டாவது பிறந்தவர் என்று அழைப்பீர்களா?. இது என்ன மாதிரியான பெயர்?.

பாரத் என்பதன் பொருளை நான் உங்களுக்கு சொல்கிறேன். அது BH (bhav), Ra (rag), ta (tal) ஆகிய மூன்று சமஸ்கிருத வார்த்தைகளால் உருவானது. நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு அப்படித் தான் இருந்தோம். நாம் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும். அதற்கு முதலில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்றார்.