அடுத்த அதிர்ச்சி..3 மாநிலங்களில் அதிகம் பரவும் டெல்டா பிளஸ் கொரோனா வகை !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக இந்தியாவில் பரவ தொடங்கியது இதனை தடுக்க ஊரடங்கை மாநில அரசுகள் அறிவித்தன.மேலும் 3 ம் அலை கொரோனா பரவலை தடுக்க அரசுகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில்,டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது.மேலும் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.