தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது !

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.