கமல் மற்றும் பா.இரஞ்சித் கூட்டணி !

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தோடு படங்களை இயக்குபவர் இயக்குனர் பா.ரஞ்சித்.மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை இயக்கினார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கமல் தற்போது விக்ரம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்த படம் ரசிகர் இடையே நல்ல ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.