கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!



