இந்திய வருமானவரித் துறையில் வேலை பெறுவது எப்படி?

மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் சக்தி வாய்ந்த துறைகளில் ஒன்றாகும். இங்கு பணிக்கு சேர்வது என்பது வாழ்க்கையில் நிலையான வருமானத்தையும் மதிப்பையும் தரும்.

வருமான வருமானவரித் துறையில் வேலை வேலை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் வருமானவரி செலுத்தும் சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. பல நாடுகளில் 30 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதைக் கணக்கில்கொண்டு, நம் நாட்டில் ஐந்து முதல் 30 சதவிகிதம் வரை வருமானவரி வசூலிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட வருமானவரித்  துறையில் வேலைப்பெற நீங்கள் விரும்பினால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். முதலில் எழுத்து தேர்வு அதில் தேர்ச்சி பெற்றால் பின் நேர்முக தேர்வு நடைபெறும்.

தற்போது வருமானவரித் துறையில் வருமான வரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் கிரேடு II மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் போன்ற பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க https://incometaxdelhi.org/ என்ற இணையதளத்தை அணுகவும்.