நடிகை கத்ரினா கைஃப்-க்கு கொரோனா உறுதி!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை கத்ரினா கைஃப் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “சோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. உடனே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டு தனிமையில் இருக்கிறேன்.

எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்துகிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

கத்ரினாவின் காதலர் என்று பாலிவுட்டில் பேசப்பட்டு வரும் நடிகர் விக்கி கவுசல், சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் கத்ரினாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.