கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை- ராமதாஸ்

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், கொரோனா வைரசை தடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அதற்கு மக்கள் அளிக்க வெண்டிய ஒத்துழைப்பைப் பற்றியும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பிறகும் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல. கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத் தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோர்த்து கொரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.