ஜெஃப் பெசாஸ் உலகின் முதல் பணக்காரர் ஆகிறார் !

டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்து வருகிறார்.தற்போது அவரை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் உலகின் நம்பர் பணக்காரர் இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்லா பங்குகள் பங்குச்சந்தையில் செவ்வாயன்று 2.4% குறைந்ததையடுத்து எலோன் மஸ்க்கின் சொத்து 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனையடுத்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இப்போது டெல்சாவைக் காட்டிலும் பெசாஸ் 995 மில்லியன் டாலர்கள் கூடுதலாக சொத்துடையவராகி டெல்சா நிறுவனர் மஸ்க்கைப் பின்னுக்குத் தள்ளினார்.