ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட்டது !

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2016ஆம் ஆண்டு மறைந்தார்.அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

அவரது நினைவிடம் கட்டும் பணியை 2018ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

இந்நிலையில் , ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறந்துவைத்தார். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேலும் அந்த நினைவிட வளாகத்தில் பூங்கா, நடைபாதை, கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவரின் சாதனைகள், சேவைகள், ஜெயலலிதாவின் உரைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.