நிறைய நன்மைகள் இருக்கும் அவகேடோ பழம் பற்றி தெரியுமா !

அவகேடோ அல்லது வெண்ணை பழம் என்று கூறுவார்கள்.இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் பி ,வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அவகேடோ ஜூஸ் அல்லது பழத்தை வாங்கி அதிகம் சாப்பிடுங்கள் .

அவகேடோ பழத்தில் அதிக அளவு பொட்டாசியம், வைட்டமின்கள்,இ இரும்புச்சத்துகக்ள், உள்ளது. இந்த வைட்டமின்களுக்கு மூட்டு வலியை நீக்கும் சக்தி உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

இப்பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்பு வகையாகும். இந்த கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தியை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பழம் சாப்பிட்டு வந்தால் இருதய சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுத்து நிறுத்தும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தில் இருக்கக்கூடிய கொழுப்பு மற்றும் அமிலம் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்கிவிடும். மேலும் இந்த பழத்தை சாப்பிட்டால் அதிக நேரம் பசி இருக்காது.