ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகிறது !

கரோனா தொற்று இருக்கும் காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.அதனால் அணைத்து படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’ஜகமே தந்திரம்’.

தற்போது ஜகமே தந்திரம் படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-யில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்-ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.