வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு !

இந்தியாவில் கரோனா தொற்றின் அலை வேகமாக பரவி வருகிறது .இதனை தடுக்க அரசு பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகிறது .தற்போது பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் முடிய இருந்த நிலையில் தற்போது 2021 செம்டம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.