பாட்னாவில் 4 பேருக்கு வெள்ளைப் பூஞ்சை தொற்று

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் 4 பேருக்கு அதை விட ஆபத்தான வெள்ளைப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரபல மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நுரையீரல் மட்டுமின்றி நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க லிபோசோமால் ஆம்போடெரிசின் பி அல்லது எல்.ஏ.எம்.பி., எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து பயன்படுகிறது. மும்பையைச் சேர்ந்த பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் நிறுவனத்தின் இம்மருந்தை பயன்படுத்த கடந்த மார்ச் மாதமே இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் தந்துள்ளார். நரம்பு வழியாக செலுத்தப்படும். ஒரு டோஸின் விலை ரூ.3,500. இதனை தினசரி வீதம் எட்டு வாரங்களுக்கு போட வேண்டியிருக்கும் என்கின்றனர்.