சின்ன தல ரெய்னாவின் சம்பளம் பற்றி தெரியுமா?

ஐபிஎல் வருமானத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தற்போது ரெய்னாவும் இணைந்தார்.

2020-ஐபிஎல் தொடரில் சர்ச்சையினால் விலகிய ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் 2021 தொடருக்காக தக்கவைத்தது, இதனையடுத்து அவர் 100 கோடிக்கும் அதிக வருவாயை ஈட்டிய 4வது ஐபிஎல் வீரர் ஆனார்.

இன்சைடுஸ்போர்ட் மணிபால் என்ற ஊடகத்தில் வந்த செய்திகளின் படி 14வது ஐபிஎல் தொடருக்கு தக்கவைக்கப்பட்டதன் மூலம் ரூ.11 கோடி பெறும் ரெய்னாவின் சம்பாத்தியம் ஐபிஎல் மூலம் ரூ.100 கோடியைக் கடந்தது.