ஐ.பி.எல் 2020 தொடர் மூலம் ரூ.4,000 கோடி வருமானம்

ஐ.பி.எல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் 4,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல், ‘கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரின் மூலம் 4,000 கோடி ரூபாய் வருமானத்தை பி.சி.சி.ஐ சம்பாதித்துள்ளது. நம்முடைய தொலைக்காட்சி பார்வையாளர்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடக்க போட்டியின்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்ட காலத்தில் 30,000 முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த 1,500 பேர் அதில் பங்களித்தனர்’ என்று தெரிவித்தார்.