ஐபோன் 12 நாளை அறிமுகம்: உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!!!

நாளை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 அறிமுகம் செய்கிறது. உலகம் முழுவதும் ‛ஐபோன்-12′ போன் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி எதுவும் அந்த தேதியில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நாளை (அக்டோபர் 13) தனது புதிய ஐபோனை ஆப்பிள் இந்த தடவை அறிமுகப்படுத்துகிறது.

‛ஹை ஸ்பீட்’ என்ற வாசகத்துடன் இந்த அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடக்கிறது.

ஐபோன் தவிர ஏர் டேக்ஸ் என்ற ப்ளூடூத் ட்ராக்கர், ஹோப் பாடீ என்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர், இயர் ஹெட்போன் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 12ல் 4 மாடல்கள் இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொன்றும் 5.4 இன்ச் முதல் 6.7 இன்ச் வரை அளவில் இருக்கும் எல்லாவற்றிலும் 5ஜி வசதி இருக்கும். ஏ 14 சிப் அதிவேகம் தரும். கேமராவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்குமெண்டெட் ரியாலிட்டிக்காக சென்சார் உள்ளது. இவற்றின் விலை 699 டாலர் முதல் 1099 டாலர் வரை இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here