நாளை சர்வதேச யோகா தினம்

 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் நாளை நடத்தப்பட உள்ளன.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நாம் நாளை ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை கொண்டாடுகிறோம். ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள்.