Scholarship: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

international-institute-of-tamil-studies-announcement-regarding-admission-with-scholarship
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Scholarship: கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ளது.

இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இந்நிறுவனத்தின் www.ulakththamizh.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் ரூ.3,100. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் கிடையாது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் டிடியும், பள்ளி கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்று நகல்கள் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். அத்துடன் வாட்ஸ் அப் எண் குறிப்பிட்டும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நேரடியாக நடக்கும். இது குறித்து கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 044 – 2254 2992 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Transgender: இனி திருநங்கையருக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் இலவசம்