Post Office Savings Schemes: ரூ.16 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

post-office-rd-savings-interest-rate-rd-calculator
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

Post Office Savings Schemes: கொரோனா லாக்டவுன் என்ற பேரிடரைக் கடந்து தற்போது தான் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். அப்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தால் பெரும்பாலான மக்கள் சேமிப்பின் மகத்துவத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இன்றைய நிலையற்ற நிதி சூழ்நிலையில் அஞ்சலகங்கங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மிகவும் நம்பகமானவையாகவும், பாதுகாப்பானவையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலான நடுத்தர வர்க்க இந்திய குடிமக்கள் மத்தியில் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வது பிரபலமாக உள்ளது, அவர்கள் தங்கள் சொத்துக்களை பணயம் வைத்து பங்குச் சந்தை அல்லது கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய ஒருபோதும் விரும்பியது கிடையாது. இந்தியாவில் உள்ள சராசரி நடுத்தரக் குடிமகனுக்கு, நிலையான மற்றும் நல்ல வட்டி விகிதங்களைக் கொண்ட நல்ல திட்டங்களில் முதலீடு செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் தபால் அலுவலகம், மக்களின் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘சின்ன முதலீடு பெரிய லாபம்’ என்ற நோக்கத்துடன் சிறிய முதலீட்டில் கூட அபாயமில்லாத பெரிய லாபத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் சரியான முதலீட்டு விருப்பங்களாகும். அப்படி மிகக் குறைந்த முதலீட்டில் அபரிமிதமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாக, தபால் அலுவலகம் தொடர் வைப்புத் (RD) திட்டம் உள்ளது.

மாதம் ரூ.10000 முதலீட்டில், 10 ஆண்டுகளில், ரூ.16 லட்சம் வருமானம் தரும்அஞ்சல் அலுவலகசேமிப்பு திட்டம் பற்றிய முக்கிய தகவல்கள் உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன

அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் என்றால் என்ன?

தொடர் வைப்புத் திட்டம் மூலம் நீங்கள் சேமிக்கும் பணம் மற்றும் நீங்கள் பெறும் வட்டி ஆகிய இரண்டுமே மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதே சமயத்தில் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளும் மிகவும் குறைவு. சிறிய அளவிலான தொகையை மாத, மாதம் தவறாமல் முதலீடு செய்வதன் மூலமாக அதிக வருவாய் ஈட்ட விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு கணக்கைத் திறப்பது ஒரு சிறந்த வழி என்பதை மறக்காதீர்கள்.

தொடர் வைப்புத்திட்ட வட்டி விகிதங்கள்:

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்திட்டம் (RD) உங்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக நீங்கள் மாதம் 100 ரூபாயை கூட சேமிக்கலாம். முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

ஆனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு திட்ட கணக்கை தொடங்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியுடன் சேர்த்து காலாண்டு முடிவில் கணக்கில் சேர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு 5.80 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

அஞ்சல் அலுவலக RD மூலமாக ரூ.16 லட்சம் பெறுவது எப்படி?

தற்போதைய 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்தத் தொகையானது உங்களுக்கு சுமார் ரூ.16 லட்சத்தை வருவாயைத் தரும். கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது, இது முதலீட்டாளர்கள் அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது.

அஞ்சல் அலுவலக RD-யின் முக்கிய அம்சங்கள்:

அஞ்சலக தொடர் வைப்பு திட்டத்தை பொறுத்தவரை மாத, மாதம் தவணை தொகையை சரியாக கட்டிவிட வேண்டும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், தவணைத் தொகையை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய முடியாமல் போனால் அபராதம் விதிக்கப்படும் என்பதை அறிந்திருக்க வேண்டும்

தற்செயலாக நீங்கள் ஒரு மாதத்தைத் தவிர்த்துவிட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து நான்கு மாதத் தவணைகளைத் தவறவிட்டால், கணக்கு தானாகவே மூடப்படும். இருப்பினும், முடக்கப்பட்ட RD கணக்கை அதன் பயனாளர் இரண்டு மாதத்திற்குள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். ஆனால் இந்த வாய்ப்பையும் நீங்கள் தவறவிட்டால் கணக்கு நிரந்தரமாக மூடப்படும். அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து ஓராண்டிற்கு பிறகு, வைப்புத்தொகையில் இருந்து 50 சதவீத தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

இதையும் படிங்க: