விஜயின் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாஸுதீன்..!

நடிகர் விஜயின் 65-வது படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 10-ஆம் தேதி, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65-ஐ சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்தின் இசையமைப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் மார்ச்சில் வெளியாகவுள்ளது.

நவாஸுதீன் சித்திக் நடிக்கும் ஜோகிரா சாரா ரா ரெயின் என்னும் பாலிவுட் திரைப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 25-முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.