மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு

சென்னை மெட்ரோ ரயில்களில் கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்படும் என்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அதன்படி,

0 – 2 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 மாற்றமில்லை
2 – 4 கி.மீ. வரை கட்டணம் ரூ.202 – 5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20
4 – 6 கி.மீ. வரை கட்டணம் ரூ.30
5-12 கி.மீ. வரை கட்டணம் ரூ.30
6 -12 கி.மீ. வரை கட்டணம் ரூ.40
12 – 18 கி.மீ. வரை கட்டணம் ரூ.50
12-21 கி.மீ. வரை கட்டணம் ரூ.40
18 – 24 கி.மீ. வரை கட்டணம் ரூ.60
21 – 32 கி.மீ. வரை கட்டணம் ரூ.50
24 கி.மீ. மேல் கட்டணம் ரூ.70

க்யூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் – தற்போதுள்ள கட்டம்- ஒன்றின் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும்.