இந்திய கலாச்சார துவக்கத்தை ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களை சேர்க்க கோரிக்கை

இந்திய கலாச்சாரத்தின் துவக்கத்தை ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களை சேர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியப் பண்பாட்டின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆராய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பண்பாட்டின் தோற்றம் வளர்ச்சி உலகின் மற்ற நாடுகளில் உள்ள தொடர்பு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்றுள்ளார் பழமையான நாகரிகத்தின் தாயகமாக விளங்கும் தென் மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட வல்லுநர் குழுவில் இல்லாதது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கீழடியில் நடைபெற்ற அகழ்வாயில் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என தெரியவந்துள்ளதாகவும் தமிழ் மொழியும் பண்பாடும் உலகின் பழமையானவை இன்னும் நீடித்து நிலைத்து நிற்பது என்பது அது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மொழி பண்பாடு ஆகியவற்றை சேர்க்காமல் இந்திய வரலாறு முழுமை அடையாது என்றும் தமிழக அறிஞர்கள் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தை சேர்ந்த சிறந்த அறிஞர்கள் வல்லுநர்கள் சேர்க்கப்பட்ட பண்பாட்டு அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here