அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைகிறாரா?-அமைச்சர் பதில்

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை செய்யவே டிடிவி தினகரன் டெல்லி சென்றாதகவும், குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு பாஜக இணைப்பு பாலமாக செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களிடம் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் அதிமுகவின் ஒரு சாதாரண தொண்டன். எனக்கு தற்போதைய தமிழக கள நிலவரம் குறித்தும் கொரோனோ பிரச்னை, விவசாய பிரச்சனைகள் குறித்து தான் தெரியும். சசிகலா அதிமுகவில் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here