கரோனா தடுப்பூசி நாடு முழுவதும் 10 நாள்களுக்குள் வழங்கப்படும் !

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து அனைத்து நாடுகளிலும்
மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு ஜனவரி 3ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. மேலும் , அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து 10 நாள்களுக்குள் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

எனவே, அனுமதி வழங்கியதிலிருந்து 10 நாள்களுக்குள் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும். மும்பை, சென்னை, கொல்கத்தா, கர்னல் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருந்துத்துறையின் நிலையங்களுக்கு விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும்.அங்கிருந்து, 37 மாநில தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பப்படும்.

பின்னர், மாவட்ட தடுப்பூசி நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இறுதியாக, ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விநியோகிக்கப்படும். தடுப்பூசிகளை சேகரித்து வைப்பதற்கு என 29 ஆயிரம் மேம்படுத்தப்பட்ட குளர்சாதன நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.