இலவச கரோனா தடுப்பூசி பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு !

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு அனுப்ப பட்டுவருகிறது.இந்நிலையில்,உள்நாட்டு தேவைகள் தவிர இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற அண்டை நாடுகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து முதல் தொகுப்பு மருந்துகளை மார்ச் மாத மத்தியிலும், 2வது தொகுப்பு மருந்துகளை ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தான் நாடு பெற்று கொள்ளலாம் என இந்தியா அறிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டின் 4.5 கோடி மக்களுக்கு தேவையான இலவச மருந்துகளை தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சர்வதேச கூட்டணி திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடமிருந்து பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.