தமிழ் திரைப்பட இயக்குநர் ஜனநாதன் காலமானார் !

தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61.தமிழில் இயற்கை,ஈ,பேராண்மை போன்ற சிறந்த படங்களை இயக்கி உள்ளார்.தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.