தரவரிசையில் முன்னேறிய இந்திய மகளிர் கால்பந்து அணி!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று வெளியிட்ட சர்வதேச மகளிர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் கால்பந்து அணி 53ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப்பட்டியலில் 2,192 புள்ளிகளைப் பெற்று அமெரிக்கா முதலிடத்திலும், 2,091 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தையும், 2,032 புள்ளிகளைப் பெற்று பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.