திரைத்துறையில் அறிமுகம் ஆகும் சந்தானத்தின் மகன்!!!

‘மஞ்சப்பை’ படத்தின் இயக்குநர் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் திரைத்துறையில் அறிமுகமாகிறார்.

தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனை சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.