கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 52,14,677 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் 41,12,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,17,754 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் 1,174 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,198லிருந்து 84,372ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.