தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை – உறவினர்கள் மனு

சிக்மகளூரில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

சிக்மங்களூர் மாவட்டம் கடூர் தாலுகா பில்லைனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த மாதம் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் சிக்மகளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு 25 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் கடைசியில் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாகவும், சிகிச்சை கட்டணமாக 9.25 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகு உறவுகளிடம் இறந்தவரின் உடலை ஒப்படைத்துள்ளனர்.

இதுபோன்ற பணத்தையும் பெற்றுக்கொண்டு சிகிச்சையும் சரிவர அளிக்காமல் இருப்பதற்கு காரணம் ஆகிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.