கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த போராட்டத்தில் அதிக உயிர்பலி ஏற்பட்டன.மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊரடங்கை அறிவித்தது.
இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன.தற்போது இந்த தடுப்பூசி போடும் பணிகளில் இந்திய அரசு 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதலில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை அதன் பின் அரசின் விழிப்புணர்வால் மக்களுக்கு தடுப்பூசி ஆர்வம் ஏற்பட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக அளவில் வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
இதையும் படிங்க : தொடர் உச்சத்தில் பெட்ரோல் விலை !



