தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சிதலைவருமான இபிஎஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடலிறக்க பிரச்சினை காரணமாக எடப்பாடிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இதன் தொடர்பான சிகிச்சைக்கு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் உடல்நிலை குறித்த தொடர் பரிசோதனைகளுக்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆர்யனின் ஜாமீன் மனு தள்ளுபடி !



