செவ்வாய் கிரகத்தின் சத்தம் !

பூமி மட்டுமில்லாமல் விண்வெளியில் பல கிரஹங்கள் உள்ளன.இதில் அனைவர்க்கும் வெகுவாக அறிந்த செவ்வாய் கிரஹத்தின் சத்தங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்தது.இந்த நிலையில் ரோவர் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிவாங்கி(மைக்ரோஃபோன்) மூலம் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட சத்தங்களை ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் பூமிக்கு அனுப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்று பல காலங்களாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் எதிர்காலத்தில் மனிதர்கள் அங்கு வாசிக்கலாமா என்று கூட ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.