ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை !

கரோனா காலகட்டத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது
சில மாதமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. மார்ச் 1ம் தேதி ஒரு சவரன் 34,736க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. கடந்த 30ம் தேதி சவரனுக்கு 248 குறைந்து, ஒரு சவரன் 33,616க்கு விற்கப்பட்டது.

இன்று மீண்டும் தங்கம் விலைய உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 29 அதிகரித்து ஒரு கிராம் 4,267க்கும், சவரனுக்கு 232 அதிகரித்து ஒரு சவரன் 34,136க்கும் விற்கப்படுகிறது. இதன்மூலம் தங்கம் சவரன் மீண்டும் 34,000ஐ தாண்டியுள்ளது. தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.