கரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் வீச தொடங்கியுள்ளது.இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பரவல் அதிகம் இருந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், படிப்படியாக குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று 2,817 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,92,780ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



