இன்று சென்னை வருகிறார் அமித்ஷா

சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஷ்புக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் ராமநாதபுரம், நெல்லை பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

வழியில், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமித்ஷா ஆதரவு திரட்டி பேசுகிறார். சென்னை பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் காரில் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தூத்துக்குடி செல்லும் அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.


சென்னையில் இன்று நடக்கும் பேரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.