தடுப்பூசி போட்டவர்களுக்கு வங்கிகளில் சலுகை

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை யூகோ வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் இது செயல்பாட்டில் இருக்கும். யூகோ வங்கிக்கு முன்னரே செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பாக, Immune India Deposit Scheme என்ற பெயரில் 25 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் 1,111 நாட்கள் ஆகும்.

முத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இன்னும் அதிக வட்டி கிடைக்கும்.