மீனவர்கள் 2 நாட்களுக்கு வங்க கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு 13 செ.மீ., சாத்தனூர், இளையான்குடி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் 2 நாட்களுக்கு வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.