ஜெயித்தால் ரூ.10 ஆயிரம் என 10 ரூபாய் டோக்கன் வழக்கிய 4 அதிமுக பெண்கள் மீது வழக்கு

money
ஜெயித்தால் ரூ.10 ஆயிரம் என 10 ரூபாய் டோக்கன் வழக்கிய 4 அதிமுக பெண்கள் மீது வழக்கு

வாக்காளர்களுக்கு 10 ரூபாய் நோட்டு கொடுத்து டோக்கன் போட்ட , அதிமுகவை சேர்ந்த 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மண்டலம் 15-க்கு உட்பட்ட 195-வது வார்டு கண்ணகிநகர் எழில்நகர் பகுதியில் பெண்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய 10 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுப்பதாக திமுகவினர் கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது புத்தம் புதிய 10 ரூபாய் நோட்டுகளை வீடு வீடாக வாக்காளர்களுக்கு டோக்கனாக வழங்குவதை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

பணம் பட்டுவாடா செய்ய டோக்கன் கொடுத்ததாக 4 பெண்களை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது 195வது வார்டில் அதிமுக சார்பில் போட்டிடும் ரவிக்கு ஆதரவாக வாக்களிக்க 10 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக வழங்கியதாகவும் ரவி வெற்றிபெற்றால் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுக்கு 10,000 வழங்குதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைதான 4 பெண்கள் மீது கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

இதையும் படிங்க: Crime: 2 மகள்களையும், மனைவியையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை