TNPSC Group 2 Exam Date : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆட்சேர்ப்பு, இடமாற்றங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களில் மாநில அரசுக்கு உதவும் அரசியலமைப்பு அமைப்பாக செயல்படுகிறது. TNPSC, மாநில நிர்வாகத்தில் உள்ள பல காலியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஆட்சேர்ப்புத் தேர்வுகளை (போட்டி, துறை சார்ந்த) நடத்துகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு TNPSC சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே 21-ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடத்தப்படும். வரும் 23.2.2022 அன்று குரூப் 2, குரூப் 2 a தேர்வுகளுக்கு அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும். TNPSC Group 2 Exam Date
வரும் 23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும். காலை நேர டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இனி காலை 9.30-12.30 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Earthquake: அதிகாலையில் நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி !



