நான் மீண்டும் நடிக்க வருவேன் – மேக்னா ராஜ்

கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் கடந்த 2018ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி சிரஞ்சீவி சர்ஜா என்ற சீரு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது திடீர் மறைவு கன்னட திரையுலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நடிப்பு என்னுடைய ரத்தத்தில் ஊறியது, எனக்கு பிடித்தமான எதையும் கைவிட வேண்டும் என்று என்னுடைய கணவர் சீரு விரும்ப மாட்டார். எனவே நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறுகிறார் நடிகை மேக்னா ராஜ்.