ரூ.1,000 கோடி பட்டாசுகள் தேக்கம்-கவலையில் வியாபாரிகள்!!!

சில மாநிலங்கள் விதித்த தடை காரணமாக, சிவகாசியில் உற்பத்தியான ரூ.1,000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

இந்த ஆண்டு ரூ.2,300 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், ரூ.1,000 கோடி அளவு பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட பிறகே மாநில அரசுகள் திடீரென தடை விதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தளவு முன்பணம் பெற்றுக்கொண்டே பட்டாசுகளை அனுப்பி வைப்பதாகவும், தடை காரணமாக தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். அடுத்தாண்டு பட்டாசு உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.