கழிப்பறையில் கேமாரா வைத்தார்கள்- மரியம் நவாஸ்

சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது தனது சிறை அறை மற்றும் கழிப்பறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டன என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சித் துணைத் தலைவர் மரியம் நவாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும் சம்பவம் நிகழ்ந்துக்கொண்டிருக்கையில், இம்ரான் கான் மட்டும், தனது இல்லத்தில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார். நாட்டில் நிகழும் பிரச்சனைகளுக்கும், பரவும் கொடிய நோய்களுக்கும் ஒரே தீர்வு, இம்ரான் கான் தலைமையிலான போலியான அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான். அவருடைய இந்த ஆட்சியில், சர்க்கரை ஆலை ஊழல் புகார் தொடர்பாக நான் கைது செய்யப்பட்ட போது, என்னுடைய சிறை அறையிலும், கழிப்பறையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன. பெண்கள் இவ்வாறுதான் சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை