5 லட்சத்தை கடந்த கொரோனா இறப்புகள்

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் சனிக்கிழமையன்று கோவிட் தொற்றுநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்ததால், அதிபர் ஜெய்ர் போல்சனரோவின் தொற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் கோவிட் தொற்றுநோய் மரணங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆரம்ப வாய்ப்புகளை அதிபர் ஜெய்ர் போல்சனரோ பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.