பெண்களுக்கான கட்டணமில்லா டிக்கெட் ரெடி

பெண்களை தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவரும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் பயணிக்க வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து சீட்டு மாதிரி வெளியாகியுள்ளது.

சிகப்பு, நீளம், பிங்க் உள்ளிட்ட நிறங்களில் தனித்தனியே அவர்களுக்கான இலவச பயண சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நகரப்பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த சீட்டு நடத்துனரால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.