பழைய நாணயங்களுக்கு லட்சம் ரூபாய்

பழைய நாணயங்கள் அரிதான நாணயங்களை சேகரிப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், பழைய நாணயங்கள் இருந்தால் பெரும் பணக்காரராவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. அதுவும், அதிஷ்டம் இருந்தால் 2 ரூபாய் கூட 5 லட்சம் ரூபாயாக மாறும்.

இரண்டு ரூபாய் நாணயம் 1994ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதில் ஒரு பக்கத்தில் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 1918ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மிகப் பழைமையான ஒரு ரூபாய் நாணயத்துக்கு 9 லட்சம் ரூபாய் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய நாணயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஜாக்பாட் வெல்வதற்கு வாய்ப்புண்டு.