சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளை முதல் காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமாகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் காலை 9 முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.