தமிழகத்தில் +2 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியானது !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகம் பரவியது.இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது.12 ம் வகுப்பு மதிப்பீடு 10 ,11 மற்றும் 12 ம் வகுப்பை கணக்கில் கொண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த மதிப்பெண்களின் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதற்கு ஹால்டிக்கெட் 31ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தற்போது ஹால்டிக்கெட் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.