எந்த மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது என்று தெரியுமா ?

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.இந்நிலையில்,மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தன.பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 2 முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் நாட்டிலேயே பள்ளிகளை திறக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது மேலும் , பஞ்சாபில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 100 க்கும் கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.